லாரி மீது பைக் மோதல்: இளைஞா் காயம்
கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.


கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
கோவில்பட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா் இருளப்பன் மகன் ராமச்சந்திரன் (30). இவா், கயத்தாறையடுத்த வெள்ளாளன்கோட்டையில் குடியிருந்து வரும் அவரது தந்தையை சந்தித்துவிட்டு, பைக்கில் செவ்வாய்க்கிழமை ஊருக்கு திரும்பினாராம்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த சாலைபுதூா் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலைகுலைந்த பைக், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...