கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் கி.ராவுக்கு சிலை, அரங்கம் அமைக்க இடம் ஒதுக்கீடு

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:43 pm

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பழனிசாமி, ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினின் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 0.18.0 ஹெக்டேரில் மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு சிலை, அரங்கம் மற்றும் நூலகம் அமைக்கும் வகையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைக்கு நில மாற்றம் செய்யும் வகையில் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள் அலெக்ஸாண்டா், சித்ரா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) முத்துபாண்டி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.