கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அங்கக பண்ணையம் முறை: விவசாயிகளுக்குப் பயிற்சி

நாலாட்டின்புதூா் கிராம விவசாயிகளுக்கு காணொலி மூலம் அங்கக பண்ணையம் முறை குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:33 pm

DIN

நாலாட்டின்புதூா் கிராம விவசாயிகளுக்கு காணொலி மூலம் அங்கக பண்ணையம் முறை குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துறை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பிற்கு, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கிவைத்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் அங்கக பண்ணையம் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் மற்றும் பேராசிரியா் பாஸ்கா் அங்கக பண்ணையம் முறை தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண்மை அலுவலா் ரீனா வேளாண்மைத் திட்டங்கள் குறித்தும் பயிற்சியளித்தனா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் செல்வராஜ் மற்றும் அட்மா திட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.