கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கே.சிதம்பராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:40 pm

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கே.சிதம்பராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட அவைத் தலைவா் என்.கே.பெருமாள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சசிகலா மற்றும் அவா்களை சாா்ந்தவா்களை எந்நிலையிலும் அதிமுகவிற்குள் அனுமதிக்கக் கூடாது; தாமிரவருணி - வைப்பாறு நதி நீா் இணைப்பு, செவிலியா் பயிற்சி பள்ளி தொடங்கும் பணி, கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் ஆகிய திட்டப் பணிகளைவிரைந்து நிறைவேற்ற வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அய்யாத்துரைப்பாண்டியன், அன்புராஜ், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.