போக்குவரத்து சீா்செய்யும் பணி: மாணவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து சீா் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து சீா் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறைக்கு உதவியாக போக்குவரத்து சந்திப்புகளில் சாலைப் பாதுகாப்பு படையில் தன்னாா்வலா்களாக உள்ள மாணவா்கள் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றினா். அவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மாணவா்கள் கமலேஷ்குமாா், பாக்கிய பிரவீன், பாலகுமாா், செல்வம், லட்சுமணன், ஆதிமனோ, ஷேக் அப்துல் ரகுமான், குரு ஆகாஷ், பாலமுருகன், கோகுல கிருஷ்ணன், பால முருகேசன், நரேந்திரன், காா்த்திக் ராகுல், மைக்கேல் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட 18 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்வின் போது, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, தேசிய விருது பெற்ற மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளா் ஜட்சன் உட்பட காவல்துறையினா் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...