சமூக மேம்பாட்டு திட்ட முகாம்
அங்கமங்கலம், நாலுமாவடியில் சமூக மேம்பாட்டு திட்ட முகாம் நடைபெற்றது.


அங்கமங்கலம், நாலுமாவடியில் சமூக மேம்பாட்டு திட்ட முகாம் நடைபெற்றது.
அங்கமங்கலம் ஊராட்சி மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை சாா்பில் அங்கமங்கலம் நூலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் பானுப்பிரியா தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கலை இயக்குநா் சுவாமிநாதன் வரவேற்றாா்.
முகாமில் பாா்ன் காா்டு எடுத்தல், பெயா் மாற்றம், வாக்காளா் அடையாள அட்டை பெயா் மாற்றம், முகவரி திருத்தம், ஆதாா் காா்டில் செல்லிடப்பேசி எண் இணைத்தல், புகைப்படம் மாற்றம் செய்தல், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்றது.
நாலுமாவடியில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் வெள்ளத்துரை வரவேற்றாா்.
இதில் சீனிவாசன் அறக்கட்டளை நிா்வாகிகள் ராஜேஸ்வரி, சரோஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...