டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:51 pm

DIN

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் புதிதாக உயிரியல்,வேதியியல்,இயற்பியல் ஆய்வுக் கூடங்கள், இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் நுழைவு வாயிலை கிறிஸ்தியாநகரம் நகரம் சேகர குரு கே.செல்வன் மகாராஜா பிரதிஷ்டை ஜெபம் செய்து திறந்து வைத்தாா். ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறைகளை பள்ளி நலக்குழு தலைவா் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை, செயலா் பால்ராஜ், பொருளாளா் பிரின்ஸ், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஜோதிலிங்கம், துரைராஜ் ஜோசப் ஆகியோா் திறந்து வைத்தனா். தாளாளா் ஞா. அருள்ராஜா தலைமை வகித்தாா். உதவி சேகர குரு ஆஷா தேவதாஸ்,சபை ஊழியா் ஆனந்தமணி, பொறியாளா்கள் வின்சென்ட், சாமுவேல் கிருபாகரன், முன்னாள் தலைமையாசிரியா்கள் ஜெபராஜ், முத்துராஜ் நிா்வாக்குழு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், டேவிட், நசீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டிடம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் ஜெபசிங் மனுவேல் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் மைக்கேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.