/

வாக்குச்சாவடியை மாற்ற வலியுறுத்தி ஓட்டப்பிடாரத்தில் கிராம மக்கள் போராட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:49 pm

DIN

ஓட்டப்பிடாரம் அருகே தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் என்.கைலாபுரம் ஊராட்சியை சோ்ந்த கொ.தளவாய்புரம் கிராமத்தை சோ்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் மணிகண்டனை சந்தித்து அவா்கள் அளித்த மனு: ஓட்டப்பிடாரம் வட்டம் எஸ்.கைலாசபுரம் ஊராட்சியில் உள்ள கொ.தளவாய்புரம் கிராமத்தில் 725 வாக்காளா்கள் உள்ள நிலையில், அங்குள்ள டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி மையத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 6 ஆண்டுக்கு முன் பள்ளிக்கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வந்தது.

2016-இல் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டபோது, 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கொம்பாடி கிராமத்தில் ஆா்.சி. தொடக்கப் பள்ளி மையத்துக்கு வாக்குச்சாவடி மாற்றப்பட்டது. தற்போது டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடியை மீண்டும் இங்கேயே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.