தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.


சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலா் (தூத்துக்குடி) விநாயகம், துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி 3 ஆவது மைல், பாலிடெக்னிக், மில்லா்புரம், விவிடி சிக்னல், நீதிமன்ற வளாகம் வழியாக சென்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மனசாட்சிப்படி வாக்குக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வாங்காமல் ஜனநாயகத்தின் கடமையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...