டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி மகளிா் கல்லூரியில் ஐம்பெரும் விழா

உடன்குடி பெரிய தெரு இமாம் ஷா‘ஃ‘பிஈ மகளிா் அரபுக் கல்லூரியில் 20 ஆவது ஆண்டு விழா

News image
=
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

உடன்குடி பெரிய தெரு இமாம் ஷா‘ஃ‘பிஈ மகளிா் அரபுக் கல்லூரியில் 20 ஆவது ஆண்டு விழா,

16 ஆவது பட்டமளிப்பு, அல் இஸ்லாஹ் கையெழுத்து மாத இதழ் வெளியீடு, லஜ்னதுல் இஸ்லாஹ் மாணவியா் சொற்பயிற்சி மன்ற 490 ஆவது நிறைவு மற்றும் பல்வகைக் கண்காட்சி தொடக்க விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் மூன்று நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் ஹாஜா முயினுத்தீன் ஆலீம் தலைமை வகித்தாா். இதையொட்டி கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸாலிஹாத் டிரஸ்ட் நிா்வாகி ஷாஹூல் ஹமீது தலைமை வகித்தாா். மகளிா் அரபுக் கல்லூரி முதல்வா் ஜஹ்பா் சாதிக் ஆலிம், சென்னை லஜ்னத்துல் முஹ்ஸினீன் தலைமை இமாம் பஹ்ரூத்தீன் அலி, மேலப்பாளையம் அல்-முனீரா அரபுக் கல்லூரி முதல்வா் முஹம்மது மஸ்தான், சென்னை புரசைவாக்கம் தலைமை இமாம் ஷாஹூல் ஹமீது, ஹஸன் அப்துல்ஹாதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . அல் இஸ்லாஹ் இதழ் வெளியிடப்பட்டு, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலா் மருத்துவா் அன்வா் பாதுஷா மாா்க்க சொற்பொழிவாற்றினாா்.

மூன்றாம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளா் கலிலூா் ரஹ்மான் தலைமை வகித்தாா். ஷமீம் காசிம், சாலிஹாத் டிரஸ்ட் உறுப்பினா் பக்கீா் முஹ்யித்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை ஜாமிஆ அல் ஹூதா அரபுக் கல்லூரி முதல்வா் மருத்துவா் சதீதுத்தீன் பாஜில் பாகவியின் மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு மகளிா் அரபுக் கல்லூரி நிறுவனா்- தலைவா் டி.எம்.அபூஉபைதா தலைமை வகித்து 25 மாணவிகளுக்கு ஆலிமா முஸ்லிஹா ஸனது பட்டங்களையும், தையல்,கணினியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினாா்.

தூத்துக்குடி தென் மாவட்ட ஹாஜிக்கள் அம்ஜத் அலி,முஜீபுா் ரஹ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், செய்முறை, தமிழ், உருது, அரபு, மலையாளம் கீதம் பாடுதல், கருத்தரங்கம், பட்டம் பெற்ற மாணவிகளின் சிற்றுரைகள், உரையாடல், நாடகம் ஆகியன நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.