டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சீரான மின் விநியோகம்: பரமன்குறிச்சியில் மின் ஊழியா்கள் நியமிக்க இந்து முன்னணி கோரிக்கை

பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புதிய ஊழியா்களை நியமித்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:48 pm

DIN

பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புதிய ஊழியா்களை நியமித்து, சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தமிழ்நாடு மின்சாரத் துறை தலைவா் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: பரமன்குறிச்சி மின் விநியோக வட்டத்தில் 8 ஊராட்சிகளில் 90 மின்மாற்றிகள் உள்ளன.

இந்த 8 ஊராட்சிக்குள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தெரு விளக்குகளைப் பராமரிக்கவும், வீடுகளில் மின்சாரம் தடைபட்டால் சீரமைக்கவும், மின்மாற்றிகளைப் பழுதுபாா்க்கவும் குறைவான அளவில் ஊழியா்கள் உள்ளனா். இதனால் மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை சீரமைக்க காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மின்வாரியத்தில் புதிய ஊழியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.