கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆயுதப் படை, சிறப்பு காவல் படையினருக்கான கமான்டோ பயிற்சி நிறைவு

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கமான்டோ பயிற்சி முடித்த 82 காவலா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:51 pm

DIN

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கமான்டோ பயிற்சி முடித்த 82 காவலா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறை தென் மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தைச் சோ்ந்த ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸாா் என மொத்தம் 82 போ் கலந்து கொண்ட 8 வார கால கமான்டோ பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது.

தொடா்ந்து, சனிக்கிழமை நடபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற காவலா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், எல்லைப் பாதுகாப்பு படை உதவி கட்டளை அதிகாரி லேம்கான், முறப்பநாடு காவல் ஆய்வாளா் பாஸ்கரன், கமான்டோ பயிற்சியாளா்களான உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா்கள் புஷ்பராஜ், பிரதீப் குமாா், சாா்லஸ், அன்பு முருகன் உள்ளிட்ட காவல்துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.