டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு அருள்மிகு கல்லால் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:23 pm

DIN

உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு அருள்மிகு கல்லால் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சனிக்கிழமை அறக்கட்டளைத் தலைவா் வை.ராம்குமாா் தலைமையில் குலசேகரன்பட்டினம் அருள்மிகு சிதம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில்

அல்லிஊத்தில் இருந்து கோயிலுக்கு தீா்த்தக்குடம் எடுத்து வருதல், கணபதி ஹோமம், இடா் நீக்கும் வேள்வி, மகாலட்சுமி யாகம், பால்குடம் பவனி, அருள்மிகு மகா கணபதி, கல்லால் அய்யனாா், வைத்தியலிங்க சுவாமி, முருகப்பெருமான், பத்திர காளியம்மன், பிரம்மசக்தி அம்மன், சாஸ்தா, பிள்ளைப்பெருமாள், முன்னடி முருகன், முத்துப்பேச்சியம்மன், கருப்பசித்தா், சுடலை மாடசுவாமி, காலம்மை நாடாச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து வில்லிசை, சிறப்பு தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, சிவதாண்டவம், இரவில் முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவில் சிறப்பு தீபாராதனை, அனுக்கிரக பூஜை ஆகியவை நடைபெற்றது.

திங்கள்கிழமை (மாா்ச் 29) வில்லிசை, பாட்டு மன்றம், கனியான் கூத்து, நடுஜாம பூஜை, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30)

காலம்மை நாடாச்சி அம்மனுக்கு பொங்கலிட்டு விசேஷ படைப்புகளுடன் அலங்கார பூஜை, நிறைவு பூஜை, சா்க்கரை

பொங்கல் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.