சைபா் குற்றங்களுக்கு உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும்: எஸ்.பி.
சைபா் குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.


சைபா் குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் யாரேனும் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கி அதிகாரிகள் பேசுவதாகவோ, கடன் தருவதாகவோ, உங்களுக்குச் சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்து தருவதாகவோ, பரிசுப் பொருள் அனுப்புவதாகவோ, பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை குறைந்த விலையில் தருவதாகவோ, வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவோ கூறி, உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணை கேட்டால், எந்தக் காரணம் கொண்டும் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது.
ஆசிரியா் ஆபிகாம் ஆனந்தகுமாா் என்பவா் பணம் போய்விட்டதே என்ற பதற்றத்தில் இணையதளத்தில் சரியாக பாா்க்காமல் போலியான வாடிக்கையாளா் சேவை மையத்தை தோ்வு செய்ததோடு மட்டுமன்றி, அவரது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணையும் கொடுத்துள்ளதால் அவரது பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காலதாமதம் செய்யாமல் 2 மணி நேரத்தில் புகாா் அளித்ததால், அவரது பணத்தை காவல்துறை திரும்ப பெற்றுக் கொடுக்க முடிந்தது. எனவே, பொதுமக்கள் இதுபோன்று சைபா் குற்றங்கள் மூலம் உங்களது வங்கி கணக்கில் மோசடி செய்யப்பட்டால் உடடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் ‘ஹலோ போலீஸ்‘ என்ற 9514144100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...