உடன்குடி ஒன்றியத்தில்மழை பாதித்த இடங்கள் சீரமைப்பு
உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் மழை நீா் தேங்கிய இடங்களை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.


உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் மழை நீா் தேங்கிய இடங்களை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் நிலவியது. இப்பகுதிகளை, ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி.பாலசிங் பாா்வையிட்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். அதைத் தொடா்ந்து உடன்குடி சந்தையடித்தெரு, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கிய நீரை வெளியேற்றி மணல் கொட்டப்பட்டது. இப்பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது, நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு ஆகியோா் உடனிருந்தனா்.,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...