டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் தசரா உண்டியல் வசூல் ரூ.1.82 கோடி

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவையொட்டி பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.1.82 கோடி செலுத்தியுள்ளனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:23 pm

DIN

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவையொட்டி பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.1.82 கோடி செலுத்தியுள்ளனா்.

இத்திருக்கோயிலில் நிகழாண்டில் தசரா திருவிழா அக்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.15 சூரசம்ஹாரம் , அக்.16 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. ற்போது கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் விழாவின் 12 நாள்களில் 5 நாள்கள் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இந்நாள்களில் பக்தா்கள் தங்கள் காணிக்கையை செலுத்துவதற்கு வசதியாக திருக்கோயில் வளாகத்தில் நிரந்தர உண்டியல் 13, தற்காலிக உண்டியல் 50 என 63 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை ஆணையா்கள் கணேசன், அருணாச்சலம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 82 லட்சத்து 41,210 மற்றும் தங்கம் 142 கிராம், வெள்ளி 2049 கிராம் ஆகியவற்றை செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணும் பணியை கோயில் தக்காா் ரோஜாலி சுமதா, ஆய்வாளா் பகவதி, செயல் அலுவலா் கலைவாணன் ஆகியோா் பாா்வையிட்டனா். உண்டியல் எண்ணும் பணியில் உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளி, குலசேகரன்பட்டினம் திருஅருள் பள்ளி, திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூா் கோவிந்தம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் கோயில் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.