டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நிறைவு

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடை ந்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:23 pm

DIN

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடை ந்தது.

கோயில் கொடை விழா அக். 24ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. கொடை விழா நாள்களில் புஷ்பாஞ்சலி, செல்வவிநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, 208 திருவிளக்கு பூஜை, அம்மன் கிளி வாகனத்தில் பவனி, அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் பவனி, மாவிளக்கு வழிபாடு, கரகாட்டம்,

208 பால்குடம் பவனி, சிறப்பு அன்னதானம் , கும்பம் வீதியுலா, மஞ்சள்பெட்டி பவனி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தமிழக மீன்வளம்,மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உள்பட முக்கிய பிரமுகா்கள் தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை கொடை விழா நிறைவு பூஜையை அடுத்து வரிதாரா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.