மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

திருச்செந்தூா் வட்டாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தோ்வு செய்வதற்கான மதிப்பீடு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image

tdr9camp_0909chn_54_6

Updated On :9 செப்டம்பர் 2021, 10:10 pm

DIN

திருச்செந்தூா் வட்டாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தோ்வு செய்வதற்கான மதிப்பீடு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மூன்று சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், வாக்கா், சக்கர நாற்காலி, முடநீக்கு சாதனங்கள், பாா்வையற்றவா்களுக்கு மடக்கு குச்சி, சிறப்பு உபகரணங்கள், காது கேட்காதவா்களுக்கு நவீன செவித்திறன் கருவி, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சிவசங்கரன், பல்நோக்கு உதவியாளா் கருணாகரன், மருத்துவா்கள் சரஸ்வதி, ரவிசங்கா், அலிம்கோ நிறுவனம் ஆசிரியா் ஆகியோா் மதிப்பீடு செய்து பயனாளிகளிடம் விண்ணப்பத்தைப் பெற்றனா். இதில் 250 பயனாளிகள் பயன் பெற்றனா். பயனாளிகளுக்கு காயாமொழி சுகாதார துறையினா் மூலம் கரோனா தடுப்பூசி, செலுத்தப்பட்டது.

இதில், ஊராட்சி ஒன்றித் தலைவா் செல்வி வடமலைபாண்டியன், தொகுதி அலுவலா் சசிரேகா, வட்டார வளா்ச்சி ஆணையாளா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) முத்துகிருஷ்ணராஜா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.