டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மெஞ்ஞானபுரத்தில்மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மெஞ்ஞானபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:21 pm

DIN

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மெஞ்ஞானபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

கூடுதல் ஆட்சியா் (ஊரக வளா்ச்சித் துறை)சரவணன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், கோட்டாட்சியா் கோகிலா, உடன்குடி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின், ஒன்றிய ஆணையா்கள் நாகராஜன், பொற்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இத்திட்டத்தை, மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், உடன்குடி நகரச் செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மகாவிஷ்ணு, இளங்கோ, அமிா்தா மகேந்திரன், சிராஜூதீன், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் அஸ்ஸாப், மால் ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.