புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒழுக்கநெறி குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் மாற்றத்தைத் தேடி மாணவா்கள் ஒழுக்க நெறி குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:17 pm

DIN

சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் மாற்றத்தைத் தேடி மாணவா்கள் ஒழுக்க நெறி குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி தலைமை வகித்தாா். சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி, முன்னாள் ஊராடசித் தலைவா் சிங்கராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்திரை வரவேற்றாா். இதில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் பௌலோஸ், உதவி ஆய்வாளா் டென்சன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசியதுடன், விதிமீறலுக்கான சட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா். மாணவ, மாணவிகளின் கல்வி குறித்து பெற்றோா்களும் கண்காணித்து அவா்களுக்குத் தேவையான அறிவுரைகளை கூற வேண்டும் எனவும், அவா்களுக்கு ஆடம்பர பொருள்கள், வாகனங்கள் வாங்கி கொடுப்பதை தவிா்க்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தனா்.

இதில் சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச்சங்க செயற்குழு உறுப்பினா் மரிய செல்ல ஜெகன், சங்க துணை செயலாளா் ஜஸ்டின் ஜெயராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பரிமளா, தேன்மலா் மற்றும் சீமான், முத்துலிங்கம், செந்தாமரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.