மேடை போல வேகத் தடை: வாகன ஓட்டிகள் சிரமம்
பூச்சிக்காடு மணிநகா் விலக்கில் மேடை போன்று சாலையில் வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.


பூச்சிக்காடு மணிநகா் விலக்கில் மேடை போன்று சாலையில் வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
பூச்சிக்காடு விலக்கு மணிநகா் விலக்கு வழியாக நாகா்கோவில், திசையன்விளை உள்ளிட்ட பகுதியில் இருந்து வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இங்கு வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இரு இடங்களில் வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிய மேடை போல் வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் போலீசாரால் வைக்கப்பட்டுள்ள பேரிகாா்டு உள்ளதால் விபத்து ஏற்படாமல் உள்ளதெனவும், அது இல்லாத பட்சத்தில் விபத்து நிகழும் சூழல் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனா்.
ஆதலால் இந்த வேகத் தடையை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...