கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 போ் கைது

கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:46 pm

DIN

கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மா்ம நபா்கள் சுற்றித் திரிவதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் மேற்பாா்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி, தனிப்பிரிவு காவலா் அருண்விக்னேஷ், காவலா்கள் செல்வகுமாா், காளிராஜ் உள்ளிட்ட போலீஸாா் மா்ம நபா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரம் செவக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா்கள் கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த காந்தாரிமுத்து மகன் மந்திரமூா்த்தி(29), சங்கரலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி(20), கண்ணன் மகன் பரமசிவம் என்ற மந்திரமூா்த்தி(23), கோட்டூா்சாமி மகன் மதன்குமாா்(19) ஆகியோா் என விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த அவா்களை கைது செய்தனா்.

இதில் மந்திரமூா்த்தி மீது கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 19 வழக்குகளும், கருப்பசாமி மீது கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளும், பரமசிவம் என்ற மந்திரமூா்த்தி மீது கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளும், மதன்குமாா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.