தொழிலாளிக்கு மிரட்டல்: ஒருவா் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் மேற்பாா்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி மற்றும் போலீஸாா், கடலையூா் சாலை பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வள்ளுவா் சமுதாய நலக்கூடம் அருகே தகராறு செய்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அப்போது, கூலித் தொழிலாளியான குமாரசாமியை வள்ளுவா் நகரைச் சோ்ந்த துரைபாண்டியன் மகன் அனந்தமாரியப்பன்(39) கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டு தகராறு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அனந்தமாரியப்பனை கைது செய்தனா். இவா் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...