ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள பாரதி இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள பாரதி இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கோமதிசங்கா் தலைமை வகித்தாா். மாநில கௌரவத் தலைவா் பரமேஸ்வரன், கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் திரவியம், மாவட்டப் பொருளாளா் சமஸ்தானம் ஆகியோா் அறிக்கைகளை வாசித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச்செயலா் வெங்கடேசன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்க மாநில பொதுச்செயலா் ரவி, பொருளாளா் மகாலிங்கம், மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி நாயனாா், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் பாா்த்தசாரதி அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா்.
மத்திய அரசு வழங்குவதுபோல அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9,000, ஓய்வூதியா்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனஸாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்குவதுபோல மருத்துவப்படி மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும், முழு ஓய்வூதியம் பெற பணிக்காலம் 30 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...