கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் மக்காச்சோள சாகுபடி பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மானாவாரி மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்து பேசுகையில், மாவட்டத்தில் ஆண்டிற்கு 47360 ஹெக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கோ.எச் 6 மற்றும் கோ.எச் 8 போன்ற வீரிய ஒட்டு இரகங்கள் வறட்சியிலும் நல்ல மகசூல் தருகிறது என்றாா்.

பேராசிரியா் சோலைமலை, உதவிப் பேராசிரியா்கள் மனோகரன், சஞ்சீவ்குமாா் , மணிகண்டன் ஆகியோா் பேசினா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் மானாவாரி தொழில்நுட்ப பூங்காவையும், பண்ணை குட்டையையும் பாா்வையிட்டனா். தொடா்ந்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில் விவசாயிகள், பண்ணை மகளிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.