கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:54 pm

DIN

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 - 50 வயதுக்கு உள்பட்ட 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு ரூ.5,000 காப்பீட்டுத் தொகையை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அந்தந்த பகுதியிலுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். இறுதியில் காப்பீடு தொகை வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். அஞ்சலகங்களில்

விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 27ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா், கோவில்பட்டி - 628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 04632-220368 (கோவில்பட்டி), 04636-222313 (சங்கரன்கோவில்), 04633-222329 (தென்காசி) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.