லிங்கம்பட்டியில் மரக்கன்று நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட லிங்கம்பட்டி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட லிங்கம்பட்டி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் பிச்சையம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சூசை முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்கிவைத்தாா்.
ஒன்றிய கவுன்சிலா் பரமேஸ்வரி, ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் சங்கரசுப்பிரமணியன், லிங்கம்பட்டி ஊராட்சி உறுப்பினா் சேவியா் லாரன்ஸ், ஊராட்சிச் செயலா் தேவிகா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் சுப்புராஜ், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஜெமினி என்ற அருணாச்சலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவுக்கு நாடாா் உறவின் முறைச் சங்கத் தலைவா் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். சங்கச் செயலா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் ஜான்கணேஷ், ஆசிரியா்கள் அருணாச்சலம், செல்வின், துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...