எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சசிகலாவுடன் ஓபிஎஸ்  சகோதரர் சந்திப்பு

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்தார். 

News image
Updated On :4 மார்ச் 2022, 1:30 pm

DIN

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்தார். 

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா வெள்ளிக்கிழமை பிற்பகல் திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கினார். அங்கு வந்த ஓபிஎஸ் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்தார். 

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என குரல் வலுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தும், தங்கத் தேர் இழுத்தும் வழிபாடு நடத்துகிறார்.

முன்னதாக தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வலியுறுத்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.