தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்கள் தன்னை சந்தித்த போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற அச்சம் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நான்காண்டுகளாக செயல்படாததால் காற்று, நிலம், நீர் ஆகியவை மாசுபடாமல் தாங்கள் நன்றாக இருப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலை இருக்கும்போது ஸ்டெர்லைட் பத்து என்ற தோல் நோய் தற்போது நான்கு ஆண்டுகளாக தங்களை பாதிக்கவில்லை என்றும், தன்னை சந்தித்தபோது அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.