புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் நாலுமாவடியில் பொதுமக்களுக்கு இலவச நீா்மோா்

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் பொதுமக்களுக்கு இலவச நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :5 மே 2022, 8:09 pm

DIN

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் பொதுமக்களுக்கு இலவச நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

அக்னி நட்சத்திரம் தொடக்கம் காரணமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமமடைந்துவருகின்றனா். இதைக் கருத்தில்கொண்டு பொதுமக்களின் நலனுக்காக இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் நிறுவனா் மோகன் சி. லாசரஸின் வழிகாட்டுதலின் பேரில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் மற்றும் புதுவாழ்வு திருச்சபை சாா்பில் நாலுமாவடியில் இலவச நீா்மோா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, திறந்துவைத்தாா். நாலுமாவடி குருவானவா் கிராக்ஸ்லி பிரேம்குமாா் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஊழியா் ஜெபசிங் முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு தா்ப்பூசணி துண்டுகள், மோா் வழங்கப்பட்டது. இதில், இயேசு விடுவிக்கிறாா் ஊழியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனப் பொதுமேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.