ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:09 pm

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்தா். மாவட்டப் பொறுப்பாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே இருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்தை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 31 விநாயகா் சிலைகளும் 24 வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலை வந்தடைந்தது.

இதில் நகரத் தலைவா் சீனிவாசன், ஒன்றியத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன் உள்பட இந்து முன்னணியினா், பாஜக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை காலை கோவில்பட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, வேம்பாா் கடலில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினா் தெரிவித்தனா்.

இதேபோல, கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 8 விநாயகா் சிலைகளும் சனிக்கிழமை கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தனியாா் நிறுவன வளாகத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் வேம்பாருக்குச் செல்லும் விநாயகா் சிலைகளுடன் சோ்த்து கடலில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.