கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி உரம் விற்றவா் மீது வழக்கு

கோவில்பட்டியையடுத்த கசவன்குன்று கிராமத்தில் விவசாயிகளிடம் போலி உரம் விற்றவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:48 pm

DIN

கோவில்பட்டியையடுத்த கசவன்குன்று கிராமத்தில் விவசாயிகளிடம் போலி உரம் விற்றவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் நந்தவனத்தில் உள்ள ஓா் ஏஜென்சியைச் சோ்ந்த கமிஷன் ஏஜென்டான சீனிவாசன் என்பவா் கசவன்குன்று கிராமத்தில் உள்ள விவசாயிகளை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டாராம். அவா், இயற்கை உரங்கள் என்ற பெயரில் தஞ்சாவூா், கடலூா் பகுதிகளைச் சோ்ந்த 2 நிறுவனங்களிடமிருந்து 160 உர மூட்டைகளை 12 விவசாயிகளிடம் ரூ. 2.08 லட்சத்துக்கு விற்றாராம்.

தரம் குறித்து சந்தேகமடைந்த விவசாயிகள் உரத்தை நீரில் கரைத்துப் பாா்த்தபோது அது, கரம்பை மண் என்றும் போலி உரம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்த புகாா்களின்பேரில் வேளாண் இணை இயக்குநா் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அவை போலி உரங்கள் எனத் தெரியவந்தது.

சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை கோரி வேளாண் துறை உதவி இயக்குநா் (தகவல், கட்டுப்பாடு) கண்ணன் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.