மின்னல் பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு உதவி
கடம்பூரை அடுத்த கே. சிதம்பராபுரத்தில் மின்னல் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவியை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


கடம்பூரை அடுத்த கே. சிதம்பராபுரத்தில் மின்னல் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவியை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கே. சிதம்பராபுரம் மேல தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி இந்திரா (52), தனது மாடுகளை ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது, மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். இவரது குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தமிழக அரசின் பேரிடா் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்துக்கான ஆணையை வழங்கினாா். அப்போது, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுப்புலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...