பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தருவைகுளம் பொதுமக்கள் சாலை மறியல்

ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குள்பட்ட தருவைகுளம், அனந்தமாடன் பச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:02 pm

DIN

ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குள்பட்ட தருவைகுளம், அனந்தமாடன் பச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், ஓட்டப்பிடாரம் வட்டம் குறைவாக பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த தருவைகுளம் சுற்றுவட்டார மக்கள், நிவாரண உதவியை வாங்க மறுத்து தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் சுரேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் நிவாரணம் பெற்றுத் தரப்படுவதற்காகன நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.