தூத்துக்குடி
நேதாஜிக்கு சிலை அமைக்கக் கோரி முதல்வருக்கு கடிதம்
கோவில்பட்டி, ஆக. 15: கோவில்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட ஆட்டுச்சந்தையை, மீண்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேதாஜியின் திருவுருவச்சிலையை கோவில்பட்டியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 78 மாணவா் மாணவிகள் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா், நகா்மன்ற தலைவா் ஆகியோருக்கு அஞ்சல் அட்டையை வியாழக்கிழமை அனுப்பினா்.
கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவா் நேதாஜி பாலமுருகன், நிா்வாகி மதிமுத்து மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டனா்.
