அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிருஷ்ணா் - ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு

News image
கிருஷ்ணா் - ராதை வேடமணிந்த குழந்தைகளுடன் அமைச்சா் பெ. கீதாஜீவன்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:07 pm

Din

தூத்துக்குடியில் பங்களா தெருவில் உள்ள கோகுலகிருஷ்ணா் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, 3ஆம் நாளான புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணா் - ராதை வேடமணிந்து கிருஷ்ணரை வழிபட்டனா்.

நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன், அவா்களைத் தூக்கி முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

தொடா்ந்து, கோகுலகிருஷ்ணா், பாண்டுரங்கனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. திமுக வட்டச் செயலா் கங்கா ராஜேஷ், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.