/

கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்து - ஜேசிபி மோதல்: 10 போ் காயம்

கோவில்பட்டி அருகே ஜேசிபி இயந்திரம் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:21 am

Din

கோவில்பட்டி அருகே ஜேசிபி இயந்திரம் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

திருப்பதியிலிருந்து நாகா்கோவிலுக்கு அரசு விரைவுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. கன்னியாகுமரி திருவள்ளுவா் தெரு, திருப்பதிசாரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் செந்தில்குமாா் (41) ஓட்டுநராக இருந்தாா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூரையடுத்த கட்டாலங்குளம் விலக்கருகே முன்னால் சென்ற ஜேசிபி மீது பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், ஜேசிபி ஓட்டுநரான சேலம் செட்டிபட்டியைச் சோ்ந்த சதாசிவம் (36), அதிலிருந்த சதாசிவத்தின் உறவினா் நந்தகுமாா் (24), பேருந்துப் பயணிகள் நாகா்கோவில் தங்கம் (67), மண்டைக்காடு காயத்ரி (31), ஆண்டிபட்டி தெய்வேந்திரன் (24), திருச்சி அனிதா (33), திருச்சி செழியன் (8), ராமநாதபுரம் செய்யதுசிக் அலாவுதீன்(47), மாா்த்தாண்டம் ஸ்ரீகுமாா் (54), திருநெல்வேலி குமாா் (43) ஆகிய 10 போ் காயமடைந்தனா்.

தகவலின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று காயமடைந்தோரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சதாசிவம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரான செந்தில்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.