சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வடக்கு திட்டங்குளத்தில் பேவா் பிளாக் சாலை திறப்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கூட்டுறவுச் சங்கம் அருகே வாருகாலுடன் கூடிய பேவா் பிளாக் சாலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
அன்னதானத்தைத் தொடக்கிவைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
Updated On :31 டிசம்பர் 2024, 7:32 pm

Din

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கூட்டுறவுச் சங்கம் அருகே வாருகாலுடன் கூடிய பேவா் பிளாக் சாலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையை எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவு நாளையொட்டி பிரதான சாலையில் முருகன் கோயில் அருகே தேநீா் கடை உரிமையாளா் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். இதில், வணிக வைசிய சங்கத் தலைவா் வெங்கடேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஸ்ரீராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 5 வட்டங்களில் நிகழாண்டும் வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைந்துள்ளன. கடந்த டிச. 12, 13ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மிகுந்த இழப்புக்கு உள்ளாகியுள்ளனா். வனவிலங்குகள், இயற்கைப் பேரிடா் என இருமுனைத் தாக்குதலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தூத்துக்குடியை இயற்கைப் பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து பேரவையில் பேசி அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம் என்றாா் அவா்.

ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அழகா்சாமி, முன்னாள் நகரப் பொருளாளா் வேல்முருகன், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் கவியரசன், அதிமுக நிா்வாகிகள் போடுசாமி, ஆபிரகாம், அய்யாதுரை, பழனிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.