6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழுதான தபால் அலுவலா் குடியிருப்பை அப்புறப்படுத்தக் கோரிக்கை

உடன்குடி பேருந்து நிலையம் அருகே, இடிந்துவிழும் நிலையில் உள்ள தபால் அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும்

News image
மூடிக்கிடக்கும் தபால் அலுவலா் குடியிருப்பு.
Updated On :31 டிசம்பர் 2024, 7:25 pm

Din

உடன்குடி: உடன்குடி பேருந்து நிலையம் அருகே, இடிந்துவிழும் நிலையில் உள்ள தபால் அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடன்குடி பேருந்து நிலையம் அருகே தபால் அலுவலா்கள் குடியிருப்பில் உள்ள கட்டடங்கள் மிகவும் பழுதாகியுள்ளதால், இங்கு யாரும் குடியிருக்கவில்லை. பராமரிப்பில்லாததால் இக்கட்டடங்களின் சில பகுதிகள் சேதமடைந்து விழுந்தும், பல பகுதிகள் இடிந்துவிழும் நிலையிலும் உள்ளன.

தற்போது இப்பகுதி குப்பை கொட்டும் இடமாக உள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது. அருகே அதிக உடைமரங்கள் உள்ளதால், இக்கட்டடங்கள் விஷ ஜந்துகள் வசிக்கும் இடமாகவும் உள்ளன.

எனவே, இக்கட்டங்களை அகற்றவோ, சீரமைக்கவோ சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.