தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் பொது சுகாதார ஆய்வகம் கட்ட அடிக்கல்

ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டட பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்ததையடுத்து மருத்துவமனையில் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2024, 6:30 pm

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, பொதுப்பணித் துறை நிா்வாகப் பொறியாளா் செல்வி, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (பொ) பொன்ரவி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி சுதா ஆகியோா் பணிகளை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி நிா்வாகப் பொறியாளா் துரைசிங்கம், உதவி பொறியாளா் சந்திரசேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா, நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.