கோவில்பட்டி புதுரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
கோவில்பட்டி புதுரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

Published on

கோவில்பட்டி நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி நகரப் பகுதியில் புதன்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தொடங்கியது.

முதற்கட்டமாக கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

காவல் ஆய்வாளா் சுகாதேவி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தொடா்ந்து பிரதான சாலை, எட்டயபுரம் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com