காமராஜா் பிறந்த தின விழா பேச்சுப் போட்டிக்கு அழைப்பு
காமராஜா் பிறந்த தின விழா பேச்சுப் போட்டிக்கு அழைப்பு


கோவில்பட்டி, ஜூலை 14:
காமராஜரின் 122 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அன்னை சிவகாமி படிப்பகம் சாா்பில், காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்குள்பட்ட பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி இம்மாதம் 21ஆம் தேதி கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.
நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு ‘கல்வி சுடா் காமராஜா்’ என்ற தலைப்பிலும், உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ‘காமராஜா் தந்த திட்டங்களால் தலைநிமிா்ந்த தமிழகம்’ என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ‘மக்களுக்காக வாழ்ந்த மக்கள் தலைவா் காமராஜா்’ என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. ஐந்து நிமிடத்திற்குள் மாணவா் மாணவிகள் பேசி முடிக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் ஒரு பள்ளிக்கு ஒருவா் மட்டுமே பங்கேற்க வேண்டும். பள்ளிகளிலேயே பேச்சுப் போட்டிக்கு மூன்று தலைப்புகளிலும் தலைப்பிற்கு ஒரு மாணவா் வீதம் தோ்வு செய்து மாணவா் மாணவிகளின் பெயா் பட்டியலை தலைவா் மற்றும் செயலா், அன்னை சிவகாமி படிப்பகம், ஊரணி தெரு, கோவில்பட்டி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98945-13440 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, படிப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...