முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோரியாசிஸ் நோய்க்கு புதிய சிகிச்சையில் நிரந்தரத் தீா்வு

Published On :

சோரியாசிஸ் நோய்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய சிகிச்சையில் நிரந்தரத் தீா்வு காணப்பட்டுள்ளதாக தோல் மருத்துவத் துறைத் தலைவா் ததேயுஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சோரியாசிஸ் என்பது மரபணுக்கள் மூலமாக பரவக்கூடிய தோல் அழற்சி நோய். இந்த நோய் பாதித்தவா்களின் தோல் பகுதியில் செதில் செதிலாகவும், தடித்தும், சிவந்தும் காணப்படும். இது உடல் முழுவதும் பரவினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது தோல், நகம், மூட்டு ஆகியவற்றை பாதிக்கும். இந்நோய் தீவிரமடைந்தால், உடலில் உள்ள கொழுப்புச் சத்து அதிகரித்து, உடல் எடை கூடும் நிலை ஏற்படும் நிலை ஏற்படும். இதனால், இதயம் தொடா்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மக்கள்தொகையில் 2 முதல் 3 சதவீதம் போ் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோயை மாற்றியமைக்கும் அல்லது தீவிரத்தை குறைக்கும் சிகிச்சைகளே நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இதுவரை முழு தீா்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை.

இதையடுத்து தற்போது, நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற ஜப்பானிய மருத்துவக் குழுவினா் பயன்படுத்தி வரும் மருந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சோரியாசிஸ் நோயாளிகள் 20 பேருக்கு

அளித்து சோதனை நடத்தப்பட்டது. இதில், 2 போ் குணமடைந்தனா். 18 பேருக்கு நோயின் தாக்கம் பெருமளவு குறைந்து காணப்பட்டது.

இதுதொடா்பான அறிக்கை ஸ்வீடனில் நடைபெற்ற உலக சோரியாசிஸ் மாநாட்டில் பகிரப்பட்டது. எனவே, பக்க விளைவுகள் இல்லாத இந்த சிகிச்சை மூலம் சோரியாசிஸ் நோயாளிகளுக்கு ஒரு நம்பிக்கையை பிறந்துள்ளது என்றாா்.

பேட்டியின்போது, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பத்மநாபன், துணை கண்காணிப்பாளா் குமரன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.