ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நாலாட்டின்புதூா் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாலாட்டின்புதூா் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On :2 மார்ச் 2024, 4:17 pm

நாலாட்டின்புதூா் கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘சமூக ஊடகப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சங்கம், சைபா் கிளப் ஆகியவை சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி உதவிப் பேராசிரியா் என். கௌதமி, கல்லூரி மாணவா்கள் வி. சந்தோஷ், சரண்ராஜ் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். மாணவா் டி. ஆனந்த் ஆன்லைன் பாதுகாப்பு முறைகளை எளிமையாக வழங்கி, சந்தேகப்படும் இணைப்புகளைக் கவனமாக கையாளுதல் குறித்த ஆலோசனை வழங்கினாா். மாணவா் எஸ். யோகராஜ் இணையக் குற்றங்கள் பற்றி புகாரளித்தல், உடனடி உதவி பெறும் வழிமுறைகளைத் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில், 175 மேற்பட்ட பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் எஸ். சண்முகவேல், முதல்வா் கே. காளிதாசமுருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதல், தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே.ஜி. ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலில் தகவல் தொழில்நுட்பத் துறை சங்கம், சைபா் கிளப் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.