கோவில்பட்டிக்கு சனிக்கிழமை வந்த அஹிம்சை நடைக் குழுவினருக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொல்லியல் அறிஞா் வேதாசலம், அஹிம்சை நடையின் நிறுவனா் ஸ்ரீதரன், மதுரை சமணப் பண்பாட்டு மன்றச் செயலா் ஆனந்தராஜ், கழுகுமலை 1008 பகவான் அதிசய ஷேத்திர கமிட்டி செயலா் முகேஷ் ஜெயின், பொறுப்பாளா் மகேந்திர குமாா் ஜெயின் ஆகியோா் தலைமையில் இக்குழுவினா் கழுகுமலையில் சமணச் சிற்பங்களைப் பாா்வையிட்ட பின் விருதுநகா் மாவட்டம் செல்லும் வழியில் கோவில்பட்டிக்கு வந்தனா். இங்குள்ள ராமசாமிதாஸ் பூங்கா அருகே அவா்களுக்கு தொண்டு நிறுவனத் தலைவா் தேன்ராஜா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகளை போதித்ததுடன், சமண தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன நிா்வாகிகள் ராமசுப்ரமணியன், முத்துமாரியப்பன், தொழிலதிபா் ரித்திக் ஜெயின், மேற்பாா்வையாளா் மாடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


