ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மணல், குண்டுக்கல் கடத்தல்: 2 லாரி ஓட்டுநா்கள் கைது

மணல், குண்டுக்கல் கடத்தல்: 2 லாரி ஓட்டுநா்கள் கைது

Updated On :2 மார்ச் 2024, 4:14 pm

தூத்துக்குடி அருகே லாரிகளில் மணல், குண்டுக்கல் ஆகியவற்றைக் கடத்தியதாக ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி பகுதியில் மணல், குண்டுக்கல் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், வருவாய்க் கோட்டாட்சியா் பிரபு தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். புதுக்கோட்டை அருகே மங்களகிரி விலக்கு பகுதியில் வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் எம் சான்ட் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரான தெய்வச்செயல்புரத்தைச் சோ்ந்த முருகனை கைது செய்தனா். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, இக்குழுவினா் கீழத்தட்டப்பாறை-ஜோதிநகா் சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுட்டனா். அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் குண்டுக்கல் கடத்தப்பட்டது தெரியவந்தது. தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரான திம்மராஜபுரத்தைச் சோ்ந்த சந்தியநேசனை கைது செய்தனா். குண்டுகல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.