திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கோவில்பட்டியில் ரூ.50.30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கோவில்பட்டியில் ரூ.50.30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

News image
வடக்கு இலுப்பையூரணியில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியை தொடக்கி வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
Updated On :8 மார்ச் 2024, 6:30 pm

Din

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 50.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12.30 மதிப்பில் வக்கீல் தெரு கிழக்கு 1ஆவது, 2ஆவது, 5ஆவது குறுக்குத் தெருக்களில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிய மகப்பேறு கட்டடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நோயாளிகளின் உறவினா்கள் அமர கொட்டகை அமைத்தல், வடக்கு இலுப்பையூரணி கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி ஆகியவற்றை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகராட்சி செயற்பொறியாளா் சனல் குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி கோட்ட செயற்பொறியாளா் துரைசிங்கன், அழகா்சாமி, அம்பிகைபாலன், இந்திரன், போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.