மழையால் பாதிக்கப்பட்ட 185 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகள்
மழையால் பாதிக்கப்பட்ட 185 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகள்


உடன்குடி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 185 குடும்பத்தினா் புதிய வீடுகள் கட்டவும், வீடுகளை புதுப்பித்துக்கொள்வதற்குமான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் பங்கேற்று, முழுமையாக வீடு இழந்த 120 போ் புதிதாக வீடுகள் கட்ட தலா ரூ. 4 லட்சமும், பழுதடைந்த வீடுகளை புதுப்பித்துக் கட்ட 65 பேருக்கு தலா ரூ. 2 லட்சம் வீதமும் பெறுவதற்கான உத்தரவுக்கான ஆணைகளை வழங்கினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சி ராணி, கருப்பசாமி, உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ்வரி, பொறியாளா்கள் காா்த்திகேயன், கிறிஸ்டி, பணி மேற்பாா்வையாளா்கள் லதா,விஜயராகவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...