

தூத்துக்குடி மாநகரில் உள்ள கல்லூரிகளில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மேயா் ஜெகன் பெரியசாமி பங்கேற்று பேசினாா். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கருப்பசாமி செய்திருந்தாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா் சங்கம் சாா்பாக நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ப.அகிலன் தலைமை வகித்தாா். பட்டிமன்ற நடுவா் நீ. நீதிசெல்வன் சிறப்புரையாற்றினா். கடல்பொருள் ஏற்றுமதி வளா்ச்சி ஆணைய துணை இயக்குநா் எஸ். ஷஸ்ஸி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்று தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, தூய மரியன்னை கல்லூரி, ஏபிசி மகளிா் கல்லூரி ஆகியவற்றிலும் மகளிா் தின விழா நடைபெற்றது.
டிரெண்டிங்

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

பள்ளியில் உலக தாய்மொழி தின விழா

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

