தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாத்தான்குளத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2024, 8:20 pm

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

ராணிபேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியக்குழு துணைத் தலைவா் தீனதயாளன், தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி அனைத்து நிலை ஊழியா்களை மிரட்டுவதாகக் கூறி, கண்டனம் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவா் ஜான்ரவி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். சங்க செயலா் கோமதி நன்றி கூறினாா்.